Enable Javscript for better performance
பட்டமங்கல கோயில் தேர் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகர் அழகுசெளந்தரியம்மன் கோயில் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
         இக்கோயிலில் கடந்த 22 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.         விழாவின் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளிக் கவசத்தில் மதியாதகண்ட விநாயகரும், ஸ்ரீஅழகுசெளந்தரியம்மனும் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 6  மணிக்கு மேல் நாட்டார், நகரத்தார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தேரினை வடம் பிடிக்க, விநாயகர் தேரும், அம்பாள் தேரும் கோயிலினை வலம் வந்து மாலை 7.15 மணிக்கு நிலையை அடைந்தன. அதையடுத்து, வாணவேடிக்கையுடன் தேர் திருவிழா நிறைவடைந்தது.     தேர் நிலை வந்த பிறகு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம் சூரைவிட்டனர்.  பத்தாம் நாளான சனிக்கிழமை தீர்த்தவாரி வைபவமும், அதைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் மஞ்சு விரட்டு நடைபெறுகிறது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai