Enable Javscript for better performance
புனித வெள்ளி: காரைக்குடி தூய சகாயமாதா ஆலயத்தில் அமைதி ஆராதனை- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளி: காரைக்குடி தூய சகாயமாதா ஆலயத்தில் அமைதி ஆராதனை

    By DIN  |   Published on : 31st March 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி, அமைதி ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
         தூய சகாயமாதா ஆலயத்தில் நடைபெற்ற புனித வார நிகழ்வில், பெரிய வியாழனன்று மாலையில் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், உதவி பங்குத் தந்தை ஜோசப் லாரன்ஸ், சென்னை லயோலா கல்லூரியில் பணிபுரியும் அலங்காரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பங்குத் தந்தை, பன்னிருவர்களின் பாதங்களைக் கழுவி திருப்பலியினைத் தொடர்ந்தார். திருப்பலி நிறைவில் திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது.    புனித வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதி ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai