Enable Javscript for better performance
அரியக்குடி கோயிலில் வைகாசி திருவிழா மே 21-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரியக்குடி கோயிலில் வைகாசி திருவிழா மே 21-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா திங்கள்கிழமை (மே21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
      தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
      இதையொட்டி வைகாசிப் பெருந்திருவிழா இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 21 ஆம் தேதி திங்கள் கிழமை (வைகாசி 7) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அதைத்தொடர்ந்து நாள்தோறும் இரவு நேரங்களில் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 29 ஆம் தேதி மாலையில் நடக்கிறது. மே 31 இல் சுவாமி வெள்ளிரத பவனியும், ஜூன் 1 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
       திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் நா.சீனிவாசன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) து. பாலதண்டாயுதம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai