Enable Javscript for better performance
இளையான்குடியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதன்கிழமை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளையான்குடி பகுதியில் கட்சி வளர்ச்சி மற்றும் ஒன்றியம், நகர் பகுதிகளில் காலியாகவுள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்,  உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில் நகர்ச் செயலாளர் அன்வர், அய்யாச்சாமி, நாகராஜன் உள்பட ஒன்றியம், பேரூர் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai