Enable Javscript for better performance
காரைக்குடி கோட்டத்தில் 14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி கோட்டத்தில் 14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் 14 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என கோட்டக் கண்காணிப்பாளர் வே. மாரியப்பன் தெரிவித்தார்.
     காரைக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள காரைக்குடி தலைமை அஞ்சலகம், தேவகோட்டை தலைமை அஞ்சலகம், தேவகோட்டை விரிவு துணை அஞ்சலகம், காரைக்குடி அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், கண்டனூர்,  புதுவயல், பள்ளத்தூர், மானகிரி, கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை, சிங்கம்புணரி, உலகம்பட்டி ஆகிய துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் புதிய ஆதார் அட்டைபெறவும், ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டைகளிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
      புதிய ஆதார் அட்டை பெற கட்டணம் ஏதுமில்லை.
     திருத்தங்களுக்கு ரூ. 25 மற்றும் சேவைக் கட்டணம் சேர்த்து ரூ. 30 மட்டும் பெறப்படும். ஆதார் அட்டை நகல் பெற வண்ண அட்டைக்கு ரூ. 24-ம், கருப்பு வெள்ளைக்கு ரூ. 12-ம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக தேவகோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் வங்கியாக செயல்படுவதால் சிறப்பு சேமிப்பு வங்கி கணக்குத் தொடங்க ரூ. 50 மட்டும் போதுமானது. இக்கணக்கு தொடங்கினால் ஏடிஎம் அட்டை வசதி உண்டு. இந்த ஏடிஎம் அட்டை மூலம் அனைத்து வங்கி ஏடிஎம் மையத்திலும், தபால்துறை ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
    விரைவுத் தபால் சேவை மூலம் வெளிநாடுகளுக்கு தபால்கள், பார்சல்கள் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தபால்களின் பயணம் மற்றும் பட்டுவாடா விவரங்களை டிராக் அன்ட் டிரேஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் உள்ள "லெட்'  தொலைக்காட்சி பெட்டி மூலம் வணிகர்கள் தங்களது நிறுவன விளம்பரங்களை வெளியிடலாம். மேலும் நிறுவனங்களின் விளம்பர துண்டு பிரசுரங்களை தபால்காரர் மூலம் வீடு தோறும் பட்டுவாடா செய்யும் வசதியும் உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai