Enable Javscript for better performance
சத்திரக்குடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 15 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சத்திரக்குடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 15 பவுன் நகை திருட்டு

    By DIN  |   Published on : 18th May 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே புதன்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
        சத்திரக்குடி அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் மனைவி அம்பிகாபதி (43). இவர் புதன்கிழமை இரவு காற்றுக்காகக் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு குடும்பத்தினருடன்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது  அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். 
    அதேபோல் இளந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராம்லெட்சுமணன்(30) என்பவர் வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
     இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் அம்பிகாபதி மற்றும் ராம்லெட்சுமணன் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த இச் சம்பவங்களால் அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai