Enable Javscript for better performance
சிவகங்கையில் மே 22-இல் பாரம்பரிய பண்ணைய தோட்டக் கலை பயிர்கள் கண்காட்சி: விவசாயிகள்  முன்பதிவு செய்ய- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கையில் மே 22-இல் பாரம்பரிய பண்ணைய தோட்டக் கலை பயிர்கள் கண்காட்சி: விவசாயிகள்  முன்பதிவு செய்ய இன்று கடைசி

    By DIN  |   Published on : 18th May 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரிய பண்ணைய மேம்பாட்டுத் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டுக்கான இயற்கை வழி தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கான கண்காட்சி மே 22 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, பாரம்பரிய தோட்டப் பயிர்களுடன் கலந்துகொள்ள விருப்பமுள்ள  விவசாயிகள் மே 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தங்களது விவரங்கள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம். 
          இது குறித்து காளையார்கோவில் தோட்டக்கலைத் துறையின் உதவி இயக்குநர் அ. ரேகா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள இக் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தோட்டக்கலை விவசாயிகள் தங்களது விளைபொருள்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
         எனவே, விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் காளையார்கோவில் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் தங்களது பெயர் மற்றும் பயிர் குறித்த  விவரத்தினை நேரடியாகப் பதிவு செய்யலாம். அல்லது 96260-06374, 72995-19348 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திடலாம்.    கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai