Enable Javscript for better performance
சீரான குடிநீர் விநியோகம் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சீரான குடிநீர் விநியோகம் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 18th May 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்  சீரான குடிநீர் விநியோகம் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
      இளையான்குடி ஒன்றியம் லெயோனார்டு நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
      சேதமடைந்த தண்ணீர் தொட்டி, பழுதடைந்த குழாய் ஆகியவற்றால் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 
       இவற்றை பழுது நீக்கி, சரி செய்து, சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர்.அப்போது இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
       கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai