Enable Javscript for better performance
திருப்புவனத்தில் கல்வி அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புவனத்தில் கல்வி அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து, திருப்புவனத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
         திருப்புவனம் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலராக உள்ளார். இவர், ஆசிரியர்களை அவரது அலுவலகத்தில் வேலை பார்க்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவித்து, அவர் மீது மாவட்ட கல்வித் துறை  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
         இதற்கு, கூட்டணியின் திருப்புவனம் வட்டாரத் தலைவர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சத்தியேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டி, மாவட்டப் பொருளாளர் ராஜசேகரன், மாவட்ட துணைத் தலைவர் மாலா, பட்டாதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் இளங்கோ, துணைத் தலைவர் ஜோசப் ரோஸ், மாநிலச் செயலர் முருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் புரட்சித்தம்பி, சிங்கராயர், ராமநாதபுரம் மாவட்டச் செயலர் முத்துமுருகன், மதுரை மாவட்டச் செயலர் ஒச்சக்காளை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai