Enable Javscript for better performance
திருப்புவனம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருப்புவனம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

    By DIN  |   Published on : 18th May 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில், நடுநிலைப்பள்ளியை  உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கலியாந்தூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ரமாமணி,  தாக்கல் செய்த மனு: 
    தமிழகத்தில் தகுதியுள்ள நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசுத் திட்டம் தயாரித்தது. நடுநிலைப் பள்ளிகள் உள்ள இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிற உயர்நிலைப் பள்ளிகள் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கலியாந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மேலும் தரம் உயர்த்துவதற்கு உரிய தகுதியை எங்கள் பள்ளி பெறவில்லை.
     ஆனால் எங்கள் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒத்துழைக்கவில்லை. இதனால், நான் விடுமுறையில் இருந்த நாள்களில் இந்த பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது அரசின் சட்டதிட்டங்களை மீறும் செயல். எனவே கலியாந்தூர் நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி, கலியாந்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து  உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai