Enable Javscript for better performance
தேவகோட்டையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சனிக்கிழமை (மே19) மாற்றுத்  திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற  உள்ளது.
        இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டை வருவாய் கோட்ட அளவில் சனிக்கிழமை (மே 19) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.    இம்முகாமில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.    
      எனவே, தேவகோட்டை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai