Enable Javscript for better performance
பிள்ளையார்பட்டி அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
     பிள்ளையார்பட்டி அருகே காட்டுப்பகுதியில் அதிக அளவில் மான்கள் காணப்படுகிறன. இவை பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடி போகும் சாலையில் ஒரே இடத்தில் அதிக அளவில் கடந்து செல்கின்றன. 
     இவை தண்ணீர் தேடி காட்டுக்குள் இருந்து தோப்புகளுக்குள் நுழைவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். அப்போது நாய்கள் விரட்டுவதால் வேகமாக சாலையைக் கடக்கும் போது விபத்திற்குள்ளாகிறது.   பிள்ளையார்பட்டி அருகே பெட்ரோல் நிலையம் மற்றும் குபேரர் கோயில் சாலை எதிரே வியாழக்கிழமை சுமார் 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் கால்கள் ஒடிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் குன்றக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
       உடனடியாக வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இருப்பினும் புள்ளிமான் இறந்துவிட்டது. பின்னர் கால்நடை மருத்துவர் பாலமுருகன் மானின் உடலை பிரேதப்பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அது வனப்பகுதிக்குள் எரியூட்டப்பட்டது.   கடந்த ஒருமாதத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட மான்கள் விபத்தில் சிக்கி இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai