Enable Javscript for better performance
மானாமதுரையில் மணல் குவாரிகள் அமைக்க அனுமதி: நீராதாரம் பாதிக்கும் என பொது மக்கள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரையில் மணல் குவாரிகள் அமைக்க அனுமதி: நீராதாரம் பாதிக்கும் என பொது மக்கள் அச்சம்

    By DIN  |   Published on : 18th May 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மானாமதுரையில் மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதால் நீராதாரம் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    தமிழகம் முழுவதும் கடந்த காலங்களில் தனியார் மற்றும் அரசு சார்பில் மணல் குவாரிகள் செயல்பட்ட போதிலும் மானாமதுரை பகுதியில் மட்டும் வைகையாற்று படுகைகளில் மணல் குவாரிகள் அமைக்க அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பின்னர் அரசு மூலம் குவாரி தொடங்கப்பட்டு,  மணல் வளம் குறைந்ததையடுத்து அவை மூடப்பட்டன.
     தற்போது மானாமதுரை, திருப்புவனம் வைகையாற்றுப் பகுதியில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. கடும் வறட்சி காரணமாக இக்குடிநீர் திட்டங்களில் நாளுக்குநாள் நீராதாரம் குறைந்து வருகிறது. இதனால் போதிய குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இந் நிலையில் மானாமதுரை ஒன்றியத்தில் வாகுடி, செய்களத்தூர் ஆகிய பகுதிகளில் வைகையாற்றுக்குள் பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மணல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போது தடையில்லாச்சான்று வழங்கியுள்ளது. செய்களத்தூர் பகுதி வைகையாற்றுக்குள் 13 லட்சத்து 90 ஆயிரத்து 63 ஹெக்டேர் பரப்பளவில் 3.53 லட்சம் கனமீட்டருக்கும், வாகுடி வைகையாற்றுக்குள் 16 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 4.15 லட்சம் கனமீட்டர் அளவுக்கும் மணல் அள்ளி விற்பனை செய்ய தடையில்லாச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரிகள் செயல்படத் தொடங்கினால் ஏற்கெனவே வறட்சியால் திணறிவரும் மானாமதுரை பகுதியில் நீராதாரங்கள் மேலும் பாதிக்கப்பட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai