காரைக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தேவகோட்டை கல்வி மாவட்ட

காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கண்காட்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமைவகித்து தொடக்கி வைத்தார்.  பள்ளியின் மாணவ, மாணவியர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், 11ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் பரிமளபாத்திமா, ராஜேஸ்வரி ஆகியோர் இக்கண்காட்சிக்கு நடுவர்களாக செயல்பட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கே. சரவணன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் பி. விஜயகாந்தி வரவேற்றார். ஆசிரியை எஸ்.விஜயலெட்சுமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com