தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை இளம் வீரர்களுக்கு பாராட்டு

பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மானாமதுரையைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள்

பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மானாமதுரையைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 28 பதக்கங்களை குவித்துள்ளனர்.
பெங்களூருவில் தேசிய அளவில் ஓபன் கராத்தே சான்பியன்ஷிப்  போட்டி செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜ்  சிட்டோரியோ கராத்தே பள்ளியிலிருந்து அதன் பயிற்சியாளர் சிவநாகர்ஜூன் தலைமையில் 10 ,மாணவர்களும் 4,மாணவிகளும் கலந்துகொண்டனர். 7- வயது பிரிவில் அருண்பாண்டியன் கட்டாவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல்இடத்தையும் , 8-9 வயதுக்குள்பட்ட பிரிவில் நித்தின் மெஸி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், மிதில் நரேஷ், கட்டா மற்றும் சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், 10-11 வயது பிரிவில் அபினேஷ், கட்டா பிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், வீரபாரதி கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், விக்னேஷ் கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 12-13 வயது பிரிவில் நித்திஷ்குமார், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் , முஹம்மது, கட்டா பிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், தருண், கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், அய்யங்கரன், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் 7-8 வயது பிரிவில் பிரியதர்ஷினி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 9-10 வயது பிரிவில் நிலக்ஷனா கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டை பிரிவில் மூன்றாம் இடத்தையும், 12-13 வயது பிரிவில் ஜெயஸ்ரீ கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் 14-15 வயது பிரிவில் சிவலெட்சுமி கட்டா மற்றும் சண்டைபிரிவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களையும், பயிற்சியாளர் சிவநாகர்ஜூனையும் மானாமதுரை பொதுமக்கள் மற்றும் போட்டியில் வென்ற மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com