காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பின் காரைக்குடி கோட்டத்தின் 31-ஆவது கோட்ட மாநாடு காரைக்குடி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கோட்டத் தலைவர் சுரேஷ் போஸ் தலைமை வகித்தார். சங்கத்தின் தென்மண்டலச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்துப்பேசினார். மாநிலச் செயலாளர் சுகுமாறன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் தபால்காரர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காரைக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சல் துறைக்குச் சொந்தமான இடங்களில் அலுவலகக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியிலிருக்கும் போது இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் செயலர் சரவணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com