திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதிகளில்கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
 திருப்பத்தூர் அருகே நெடுமறம் பகுதியில் காலை 8 மணிக்கு தனது தேர்தல் பிரசார பயணத்தைத் தொடங்கிய கார்த்தி சிதம்பரம் வாக்காளர்களிடம் பேசியது: நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும். மாணவர்களுக்கான கல்விக்கடன் தொடர்ந்து வழங்கப்படும். 
விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள விவசாயிகள் கண்டறியப்பட்டு விவசாயப் பெண்கள் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும். கேபிள் கட்டணத்தை  குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தொடர்ந்து வேலங்குடிப் பகுதியில் வாழும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களிடம்  மதச்சார்பற்ற  கூட்டணியை ஆதரித்து வாக்களித்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வேலங்குடி, சாம்பிராணிகருப்பர் கோயிலை சுற்றி வந்து தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டார். பின்னர் பூலாங்குறிச்சி, உலகம்பட்டி, கீழவயல், காளாப்பூர், பிரான்மலை, எஸ்.புதூர், கிருங்காகோட்டை, காரையூர், கோட்டையிருப்பு, திருக்களாப்பட்டி,  உள்ளிட்ட  திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 3 ஒன்றியங்களிலும் வாக்கு சேகரித்தார். 
இப்பிரசாரத்தில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்டத்துணைச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன், இ.எம்.எஸ்.அபிமன்யு, தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் சண்முகவடிவேல், விராமதி மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com