சுடச்சுட

  

  காரைக்குடி வாக்குகள் எண்ணும் மையத்தில் பொதுப் பார்வையாளர் ஆய்வு

  By DIN  |   Published on : 16th April 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிவகங்கை மக்களவைத் தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு, காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்குகள் எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
  காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை மக்களவைத் தொகுதி. வாக்குப் பதிவுகள் முடிந்ததும் இயந்திரங்களை பாதுகாக்கவும், வாக்குகள் எண்ணுவதற்கும், காரைக்குடி மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
  இதில், வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துப் பாதுகாப்பதற்கு, தொகுதி வாரியாக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தனித் தனி அறைகளும், அதே பகுதியில் மற்றொரு அறையில் வாக்குகள் எண்ணுவதற்காக தடுப்புக் கம்பி வலைகளும், தடுப்புக் கட்டைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   மேலும், வளாகத்தின் உள்ளே பாதுகாப்புக்காக தடுப்புக் கட்டைகள் வைத்துக் கட்டப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  இதனை, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் ஹர்பிரீத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இவர், தேர்தல் அதிகாரி ஜெ. ஜெயகாந்தன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் ஈஸ்வரி ஆகியோரிடம் பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, டி.எஸ்.பி. அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai