சுடச்சுட

  

  கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

  By DIN  |   Published on : 16th April 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமைசித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.
  இக்கோயிலில் சித்திரை திருவிழா  ஏப்ரல் 7 இல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.  இதில் 8 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9 ஆம் திருநாளான திங்கள்கிழமை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். 
  அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளையாத்தங்குடி, திருப்பத்தூர், சேவிணிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai