சுடச்சுட

  

  தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவராக மகாத்மா காந்தியடிகள் விளங்கினார் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
  காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியின் பாரி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரைத்திருவிழாவில் பாரிநகர் நலச் சங்கத் தலைவர் சே. நவசக்தி தலைமை வகித்துப்பேசினார். இதில், போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி அடிகளார் பேசியதாவது: எழுத்துக்கும்,சொல்லுக்கும் மட்டுமல்லாமல் மானுடர் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறிய மொழி தமிழ். அப்படிப்பட்ட தமிழ்மொழி மீதும், தமிழர்கள் மீதும் பேரன்பு கொண்டவராக மகாத்மா காந்தியடிகள் விளங்கினார். சாதாரண வழக்குரைஞராக தென்ஆப்பிரிக்காவுக்கு காந்தியடிகள் சென்றபோது  அங்கு இந்தியர்களின் திருமணச்சட்டம் செல்லாது என்று நடைமுறைப்படுத்திய வெள்ளையர்களை எதிர்த்து வீரியம் செரிந்த போராட்டத்தை தமிழர்கள் நடத்தினர். அப்போது வள்ளியம்மை என்கிற 11 வயது சிறுமி சிறை சென்று உயிர்நீத்த சம்பவமே காந்தியடிகளுக்கு மனவருத்தத்தையளித்தது. 
  தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவுக்கு அகிம்சைவாதியாக திரும்ப தமிழர்களே காரணம். அதனால்தான் தமிழையும், தமிழர்களையும் அவர் நேசித்தார். தமிழ் கற்க ஆசைப்பட்டும் பணிப்பழுவால் அது முடியாமல் போனதாக காந்தியடிகள் வருந்துவது உண்டு. இருப்பினும் அவர் திருக்குறள் மட்டும் அடிக்கடி கூறுவார். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத்தக.. என்ற குரலை அவர் அடிக்கடி கூறுவார் என்றார்.
   விழாவில் பேராசிரியர் பாகை இரா. கண்ணதாசன் சிறப்புரையாற்றினார். 
  பொருளாளர் பி. சதீஸ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் அய்க்கண், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் ஆர். சேதுராமன், தமிழிசைச்சங்க செயலாளர் வி. சுந்தரராமன், பாரிநகர் நலச்சங்க முன்னாள் நிர்வாகிகள் பொன்துரை, பி.வி. சுவாமி, மு. நாராயணன், முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரிசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பாரிநகர் நலச்சங்க செயலாளர் மு. சேதுராமன் வரவேற்றார். முடிவில் துணைத்தலைவர் ஆ. இளங்கோவன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai