அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

காரைக்குடி அழகப்பா அரசு கலை க்கல்லூரியில் 2019 - 2020-ஆம் கல்வியாண்டுக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட

காரைக்குடி அழகப்பா அரசு கலை க்கல்லூரியில் 2019 - 2020-ஆம் கல்வியாண்டுக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட பட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஏப். 15) முதல் வழங்கப்படுகின்றன. 
கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மாணவர்கள் தங்களது சாதி சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் அலுவலகத்தில் சமர்ப்பித்து, இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் என்று, கல்லூரி முதல்வர் மா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com