உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல்:  அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 28 ஆம் இடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் பல்கலைக்கழகப் பிரிவில் 28-ஆவது இடத்தையும், அனைத்துக்கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் 47-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. 
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தினை அளவிடும் வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் தேசிய தர நிர்ணய கட்டமைப்பை வடிவமைத்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் 2019 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இதில் பல்கலைக்கழகப் பிரிவில் அழகப்பா பல்கலைக்கழம் 28-ஆவது இடத்தையும், அனைத்துக்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் 47-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.  மேலும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தர வரிசைப்பட்டியலுக்கு, தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த அரசு பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 
கற்றல், கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி, வல்லுநர் திறன்கள், பட்டதாரிகள் தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு, சமூக தொடர் புகள் மற்றும் ஒருங்கிணைத்தல், பொதுமக்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களின் கருத்து அறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் அழகப்பா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் 48.25 புள்ளிகள் பெற்றிருந்தது. நடப்பாண்டில் இப்புள்ளிகள் 48.54 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் மற்றும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் அழகப்பா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் ஜெ. ஜெயகாந்தன் ஆகியோர் கூறியது: இந்த சாதனையானது அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரது உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com