தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம் பிரசாரம்

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். 

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். 
   மானாமதுரை நகரில் ரயில்வே காலனி, கன்னார்தெரு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி என்ன வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்.  இவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக இளைஞர்களின் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவில்லை. 
  விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தாமல் அவர்களை கடனாளிகளாக்கி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு மக்களை சாலையில் அலையவிட்டது தான் பாஜக அரசின் சாதனையாகும். இந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடையாது. 
தமிழர்களின் கலாச்சாரத்துக்கு எதிரான பாஜக நாட்டை ஆளக் கூடாது. இந்தி பேசும் மக்கள் மீதுதான் இவர்களுக்கு அதிக அக்கறை உள்ளது. தமிழர்களை பாஜக அரசு இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. மத்திய அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது. 
  நடக்கவுள்ள மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் காங்கிரஸ், திமுக கூட்டணியை மக்கள் ஆதரித்து, வெற்றி பெறச் செய்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார். 
  இப் பிரசாரத்தில் காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், காங்கிரஸ் நகரத் தலைவர் கணேசன், நிர்வாகிகள் ஜி.ராஜாராம், ரமேஷ்கண்ணன், புருஷோத்தமன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com