திருப்பத்தூரில் தெருக்களை சுத்தம் செய்து சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 17th April 2019 06:34 AM | Last Updated : 17th April 2019 06:34 AM | அ+அ அ- |

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திருப்பத்தூரில் தெருக்களை சுத்தம் செய்து வாக்குச் சேகரித்தார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த முகமதுரபீக், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாள்களாக தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோச் சின்னத்திற்கு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். செவ்வாய்க்கிழமை இறுதி நாள் பிரசாரத்தின் போது, திருப்பத்தூரில் ஒவ்வொரு தெருவாகச் சென்று குப்பைகளைச் சுத்தம் செய்து வாக்குகள் கேட்டார்.
நோட்டாவிற்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ள வாக்காளர்கள், ஆட்டோவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...