சிவகங்கையில் சமூக வலைதள பகிர்வுகள் கண்காணிப்பு

சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிர்வு குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட


சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிர்வு குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கூட்டாக புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சமூக வலை தளங்களில்   குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றி  தவறாக பேசிய விடியோ வெளியானது. அவ்வாறு பேசியவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இதுபோன்று வரும் வதந்திகளையும், குறுஞ்செய்திகளையும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், அவ்வாறு தவறாக வரும் குறுஞ்செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிரவும் வேண்டாம், சர்ச்சை கருத்துக்களை கொண்ட பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். தொழில்நுட்பப் பிரிவு பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர்களைக் கொண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. ஆகவே பொதுமக்களிடம் ஜாதி ரீதியான பகைமை உணர்வைத் தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது உள்ளிட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com