திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
By DIN | Published On : 27th April 2019 06:28 AM | Last Updated : 27th April 2019 06:28 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகே சுண்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் ராமசாமி(72). இவர் அப்பகுதியில் உள்ள நாய் ஒன்றை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஆனந்தி விசாரணை நடத்தியதில், ராமசாமி கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்டவராயன்பட்டி போலீஸார் கைது செய்தனர்.