முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th August 2019 03:50 AM | Last Updated : 04th August 2019 03:50 AM | அ+அ அ- |

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் பயண நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ் இணைப்புகளுடன் அஞ்சல் மேல் உறையில் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால் பாரம்பரிய கட்டடம் (முதல் தளம்), சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு வரும் ஆக.30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.