முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருக்கோஷ்டியூர் பெருமாள்கோயிலில் கோசாலை தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 03:51 AM | Last Updated : 04th August 2019 03:51 AM | அ+அ அ- |

சிவகங் கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை கோசாலை தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா கோயிலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேவஸ்தான மேலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இவ்விழாவையொட்டி முதலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்று தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது.
பின்னர் பசுக்களுக்கு மாலை மற்றும் வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. ரமேஷ் ஸ்ரீராம் பட்டச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பசுக்களுக்கு தீபாராதனை செய்தனர். தொடர்ந்து கோயிலுக்கு வழங்கப்படும் பசுக்கள் கோசாலை எனப்படும் பசுமடத்தில் வைத்து பராமரிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.