முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்புவனம் அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் பலி
By DIN | Published On : 04th August 2019 03:51 AM | Last Updated : 04th August 2019 03:51 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே சாலை விபத்தில் காய
மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார்(46). இவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 9ஆம் தேதி தனது மாமியார் கோசலையை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருப்புவனம் அருகே பனையனேந்தல் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்புவனத்தில் நான்குவழிச் சாலையில் வந்தபோது எதிரே வந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கோசலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். திருப்புவனம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.