Enable Javscript for better performance
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

    By DIN  |   Published on : 05th August 2019 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கடந்த ஜூலை 27 ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள், அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத்தையொட்டி காலை 8 மணிக்கு மேல் சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நிகழ்வும், மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. 11 ஆம் திருநாளான ஆக. 5 இல் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று தங்கத் தோளுக்கினியானில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெற உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai