Enable Javscript for better performance
காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான  சுதந்திரம் கிடைத்திருக்கிறது: ஹெச். ராஜா- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான  சுதந்திரம் கிடைத்திருக்கிறது: ஹெச். ராஜா

    By DIN  |   Published on : 06th August 2019 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
     ஜம்மு - காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்கியதை வரவேற்று  ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
    ஜம்மு - காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு முழுமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர ஜம்மு - காஷ்மீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் எந்த மாநிலமும் விசேஷமாக நடத்தப்படாது. எல்லா மாநிலங்களும் சமமாக நடத்தப்படும் என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. உண்மையான சுதந்திரம் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இனிமேல் சுதந்திரக்காற்றை அவர்கள் சுவாசிப்பார்கள். இரண்டு மூன்று குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீருக்கு விடுதலை கிடைத்திருப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் துணிச்சலாக செயல்பட்டிருக்கிறார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai