காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான  சுதந்திரம் கிடைத்திருக்கிறது: ஹெச். ராஜா

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
 ஜம்மு - காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்கியதை வரவேற்று  ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
ஜம்மு - காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு முழுமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர ஜம்மு - காஷ்மீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் எந்த மாநிலமும் விசேஷமாக நடத்தப்படாது. எல்லா மாநிலங்களும் சமமாக நடத்தப்படும் என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. உண்மையான சுதந்திரம் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இனிமேல் சுதந்திரக்காற்றை அவர்கள் சுவாசிப்பார்கள். இரண்டு மூன்று குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீருக்கு விடுதலை கிடைத்திருப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் துணிச்சலாக செயல்பட்டிருக்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com