கல்லூரி மாணவ, மாணவியரின் உழவாரப் பணி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நேஷனல் அகாதெமி கல்லூரி மாணவ, மாணவியர், கோயில்கள் மற்றும்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நேஷனல் அகாதெமி கல்லூரி மாணவ, மாணவியர், கோயில்கள் மற்றும் குளங்களில் வியாழக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனர். 
இக்கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்களுடன் சேர்ந்து, திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆதித்திருத்தளிநாதர் ஆலயம், பூமாயி அம்மன் கோயில், கருப்பர் கோயில், தூயஅமல அன்னை ஆலயம், ராஜகாளியம்மன் கோயில், மதுரை சாலையில் உள்ள ஆரோக்கியநாதர் ஆலயம், சின்னப் பள்ளிவாசல், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைப் பகுதிகளில் பல குழுக்களாகப் பிரிந்து, உழவாரப்  பணியில் ஈடுபட்டனர். 
இதில், கோயில் குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் முள்புதர்களை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 
மேலும், சாலை ஓரம் மற்றும் மழைநீர் வடிகால் பாதையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றி தூய்மைப்படுத்தினர்.இப்பணிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செந்தில்குமார், தனவேந்தன், சதக்கத்துல்லா, பொன்னுச்சாமி, பெர்க்மான்ஸ் மற்றும் ஆசிரியைகள் மதுமோனிஷா, மகாலெட்சுமி, பூவிழி, ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com