காரைக்குடி பள்ளியில் மாணவியர் தலைமைக்கான தேர்தல்

காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் தலைமைக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் தலைமைக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
  இப்பள்ளியில் மாணவியர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களவைத் தேர்தல் போல் நடத்தப்பட்டு ஒவ்வொரு துறைவாரியாக தலைமை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று தேர்தல் நடைபெற்றது. எதிர்கால இந்தியாவின் ஆணிவேர் என்பதால் சமூக அக்கறை, சமூக பிரச்சனையில் மாணவியர்களின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டது.
   இதில் நெகிழிஒழிப்பு, மரங்களை பாதுகாத்தல், தண்ணீர், மின்சாரம், பெட்ரோலியம் சிக்கனப் பயன்பாடு போன்ற பல்வேறு கருத்துகளை மாணவியர்களிடம் பள்ளிப் பருவத்திலேயே சிந்திக்கவும், செயலாற்றவும் இந்தத் தேர்தல் நடைமுறையை செயல்படுத்திவருவதாகவும், இதில் செயலர், துணைச்செயலர் என சுகாதாரம், ஒழுக்கம், நீர் மற்றும் பசுமை மேலாண்மை ஆகிய துறைகளுக்கென தலைமை தேர்வு செய்யப்பட்டு எப்படி செயல்படுவது என்பது போன்ற நெறிகளை ஒழுங்கு படுத்தி செவ்வனே செயல்படவும் மாணவியர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது என்றும் ஆசிரியைகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com