திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினரால் மத நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினரால் மத நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில், புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கான்சாயபு பள்ளிவாசலுக்கு சந்தனக்குடம் எடுத்துச் செல்லும் வைபவம் மற்றும் வெள்ளிக்கிழமை ராஜகாளியம்மனுக்கு பால்குடம், பூத்தட்டு, அக்கினிச் சட்டி உள்ளிட்டவை எடுத்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து மதநல்லிணக்க விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, இந்தாண்டுக்கான விழா வியாழக்கிழமை சந்தனக் குட ஊர்வலமானது, கான்சாயபு பள்ளிவாசலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அதையடுத்து, இப்பள்ளிவாசலில் சந்தனம் தெளிக்கப்பட்டு, பட்டுகள் சாத்தப்பட்டு தொழுகை நடைபெற்றது. 
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ராஜகாளியம்ம
னுக்கு பால்குடம் மற்றும் பூத்தட்டுகள் சுமந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இப்பகுதியில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக, இத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com