சுடச்சுட

    

    அழகப்பா பல்கலை.யில் ஆக. 17 முதல் தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள்

    By DIN  |   Published on : 15th August 2019 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
    இதுகுறித்து அதன் இயக்குநர் (பொறுப்பு) கே. அலமேலு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் அகடமிக் இயர் 2017- 2018 மற்றும் காலண்டர் இயர் 2017, 2018 ஆண்டுகளுக்கான பி.எஸ்சி., எம்.எஸ்சி., கணிதம் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு ஆக. 17, 18, 23, 24, 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் உள்ள கணிதத் துறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு வகுப்புகள் நடைபெறும்.
    அகடமிக் இயர் 2017- 2018, காலண்டர் இயர் 2017, 2018 ஆம் ஆண்டுக்கான பி.ஏ., எம்.ஏ., இலக்கியம் மாணவர்களுக்கு செப்டம்பர் 13 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. பகுதி 1 தமிழ் அனைத்து பி.ஏ., பி.எஸ்சி.
    இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 13- ஆம் தேதியும், பி.லிட்., தமிழ் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 16- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையிலும், எம்.ஏ. தமிழ் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையிலும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai