சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் குருந்தங்குளத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  இவ்விழா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு மடத்திலிருந்து முளைப்பாரியை மந்தையம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
  முக்கிய விழாவான முளைப்பாரி ஊர்வலத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. மந்தையம்மன் கோயிலிருந்து முளைப்பாரியை பக்தர்கள் சுமந்து பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் குஞ்சுகருப்பணசுவாமி கோயிலில் உள்ள ஊருணியில் முளைப்பாரியைக் கரைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  இதேபோன்று சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் உள்ள மந்தையம்மன் கோயில், திருமாஞ்சோலையில் உள்ள மந்தையம்மன் கோயில்களிலும் முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai