சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆனைக்குளத்தில் உள்ள நிறதலமுடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
  இவ்விழா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளைகளில் நிறதலமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அழகுடையான் கிராமத்தில் உள்ள வேளார் சுதையிலிருந்து நேற்றிக் கடன் குதிரைகளை சுமந்து வந்த பக்தர்கள் ஆனைக்குளத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பு இறக்கி வைத்தனர்.
  முக்கிய விழாவான புரவி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.விநாயகர் கோயிலிலிருந்து புறப்பட்ட புரவி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நிறதலமுடைய அய்யனார் கோயிலை அடைந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai