சுடச்சுட

  

  "மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை'

  By DIN  |   Published on : 15th August 2019 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றிட தமிழக அரசு எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
  காரைக்குடியில் நகர காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாஜகவைப் பொறுத்தவரை அவர்களின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகளாவே ஆக்கி சட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். அந்த நபர் தீவிரவாதி இல்லை என்பதை பின்னர் நீதிமன்றப்படிகளில் ஏறி நிரூபித்து வெளியே வரவேண்டிய நிலையே உள்ளது. இடதுசாரி சிந்தனை உள்ளவர்களை அச்சுறுத்தவே இதுபோன்ற நடவ டிக்கைளை எடுக்கிறார்கள். மருத்துவக் கவுன்சில் அமைத்தால் மாநில உரிமைகள் பறிபோயிவிடும். இதன் பின்விளைவுகள் தெரியாமல் சில கட்சிகள் ஆதரிக்கின்றன.
   சிவகங்கை தொகுதி குறித்து மக்களவையில் மூன்று கேள்விகள் கேட்டுப் பேசினேன். அதில் காவிரி-குண்டாறு திட்டம் பற்றியது. 
  இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்றபோது எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்ற பதில் வந்தது. மாநில அரசாங்கம் திட்டம் குறித்து கேட்டதா என்றால் மாநில அரசும் எதுவும் கேட்கவில்லை என்ற தகவல் வந்தது. பின்னர் தொகுதியில் உள்ள எரிவாயு திட்டத்தில் விரிவாக்கம் உண்டா என்று கேட்டதற்கு எந்தவித விரிவாக்கம் செய்யவும் நாங்கள் திட்டம்போடவில்லை என்றார்கள். 
  மூன்றாவதாக காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட சிவகங்கை நறுமணப்பொருள்கள் பூங்கா குறித்துகேட்டதற்கு கடந்த ஜூலை மாதம் தான் பிடிஓவுக்கு செயல்படுத்துவதற்கான உத்தரவே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. 
  எனவே மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை என்ற கசப்பான உண்மை தான் தெரியவந்திருக்கிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai