சுடச்சுட

  

  வெற்றியூர் அன்னபூரணி அம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

  By DIN  |   Published on : 15th August 2019 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்குடி அருகே வெற்றியூரில் அன்னபூரணி அம்மன் முளைப்பாரித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
  வெற்றியூர் கிராமத்தில் நகரத்தார்கள், நாட்டார்கள் இணைந்து இந்தத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இதற்கு அவர்கள் புள்ளி வரி செலுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். புள்ளி வரி என்பது திருமணமானவுடன் அந்த ஆண் ஒரு புள்ளி கணக்கில் வருவதாக ஊர்பிரமுகர்கள் தெரிவித்தனர். 8 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரியை பக்தியுடன் வளர்க்கத் தொடங்குகின்றனர்.
  விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு முளைக்கொட்டு திடலில் அனைத்து முளைப்பாரிகளையும் வைத்து பாரம்பரிய முறை பாடல்கள் பாடி ஆண்கள், பெண்கள் என அனைவரும் கும்மி அடித்து கொண்டாடி அங்கிருந்து முளைப்பாரியை எடுத்துக்கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று அம்மன் முன்பு வைத்து பின்னர் அங்கிருந்த குளத்தில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை உள்ளூர் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
  திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவையொட்டி செவ்வாய்கிழமை கோயிலில் கூடிய பெண்கள் முளைப்பாரியை சுற்றி வந்து கும்மியடித்தனர். பின்னர் புதன்கிழமை கோயிலிலிருந்து முளைப்பாரியை சுமந்து திருத்தளிநாதர் கோயில், கோட்டைக்கருப்பர் கோயில், தேரோடும் வீதி, தபால் அலுவலகச் சாலை, பேருந்து நிலையம் மற்றும் பெரியகடை வீதி வழியாக ஊர்வமலாக வந்து சீதளி குளத்தில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai