அழகப்பா பல்கலை.யில் விரைவில் காந்திய படிப்பு துறை துவக்கம்: துணைவேந்தர் தகவல்

அழகப்பா பல்கலைக் கழகத்தில் காந்திய படிப்பு துறை விரைவில் துவங்கப்படும் என்று துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் காந்திய படிப்பு துறை விரைவில் துவங்கப்படும் என்று துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
 நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 100 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றிவைத்து  அவர் பேசியது:தேசப்பிதா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் விரைவில் நடத்தப்பட உள்ளது. மேலும் காந்திய படிப்பு துறையும் விரைவில் துவங்கப்படும். தமிழ்நாடு 9-ஆவது பட்டாலி யன் தேசிய மாணவர் படையினர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை பிரிவு அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தானாக முன்வந்து சேர்ந்திருக்கிறார்கள். நாட்டின் இறையாண்மையைக் காப்பது ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் கடமையாகும் என்றார். விழாவில் 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவவீரர் தங்கவேலுவின் துணைவியார் இன்பவள்ளி,  2017 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இளையராஜாவின் மனைவி செல்வி ஆகியோருக்கு சால்வை அணிவித்து சான்றிதழை துணைவேந்தர் வழங்கினார். முன்னதாக மாணவர்கள், வளாகப் பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை துணைவேந்தர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவினர், பதிவாளர் குருமல்லேஷ் பிரபு, தேர்வு நெறியாளர் உதயசூரியன், நிதி அலுவலர் சந்திரமோகன், முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com