Enable Javscript for better performance
காரைக்குடியில் ஆக.27-இல் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் ஆக.27-இல் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

    By DIN  |   Published on : 24th August 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில்  செவ்வாய்க்கிழமை (ஆக.27) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 
    காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன் பெறும் வகையில் வரும் 27 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,காரைக்குடி கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். 
    அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai