Enable Javscript for better performance
திருப்புவனத்தில் மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புவனத்தில் மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்

    By DIN  |   Published on : 24th August 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள், ஒரு டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
    திருப்புவனம் போலீஸ் சரகம் பொட்டப்பாளையம் பகுதியில் கால்வாய்க்குள் மணல் அள்ளி மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி திருப்புவனம் போலீஸார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மதுரை மாவட்ட எல்லையான பொட்டப்பாளையம் கிராமத்தில்  மணல் கடத்தி வந்த 12 மாட்டு வண்டிகள் ஒரு டிப்பர் லாரியை மறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
    அப்போது மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மாட்டு வண்டிகளையும், லாரியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai