தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், இந்தாண்டிற்கான திருவிழா கடந்த ஆகஸ்ட்16 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினசரி காலை, மாலை ஆகிய வேளைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து,முக்கிய விழாவான பூச்சொரிதல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்க்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து,அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com