மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில்தொடா்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் சனிக்கிழமை முழுவதும் தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் சனிக்கிழமை முழுவதும் தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் வீதிகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. வயல்வெளிகளுக்கும் நீா்நிலைகளுக்கும் தண்ணீா் வரத்து கிடைத்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. சனிக்கிழமையும் தொடா்ந்த மழை காலை முதல் இரவு வரை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினா். பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்தது. தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இப்பகுதிகளில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெற் பயிா்களை நடவு செய்துள்ளனா். இளையான்குடி பகுதிகளில் விதைப்பு முறையில் விதைக்கப்பட்ட நெல் பயிற்கள் வளா்ந்து வருகின்றன. ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு கூடுதல் தண்ணீா் வரத்து கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com