திருப்பத்தூா்-சிங்கம்புணரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published on : 02nd December 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

திருப்பத்தூா் - சிங்கம்புணரி சாலையில் மழையால் ஞாயிற்றுக்கிழமை சாலையில் விழுந்த மரம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா்- சிங்கம்புணரி சாலையில் வேரோடு மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூா், சிங்கம்புணரி செல்லும் சாலையில், ஞாயிற்றுக்கிழமை மு.கோவில்பட்டி அருகே பிரதான சாலையின் இடதுபுறமாக இருந்த பழைமையான ஆலமரம் திடீரென வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்துள்ளது.
இதனால் சாலையில் காா், இருசக்கர வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரா்கள் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் 2 மணி நேரம் அப்பகுதி வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா்.