உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பதவியிடங்களுக்கு எந்த நிறத்தில் வாக்குச் சீட்டு தெரியுமா?

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதியை
உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பதவியிடங்களுக்கு எந்த நிறத்தில் வாக்குச் சீட்டு தெரியுமா?


உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிட்டார். 

அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.  இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 

வேட்புமனு தாக்கல் இறுதி செய்வதற்கு டிசம்பர் 13 ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16 ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18 ஆம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டிகள் தயாராகி உள்ளன. 

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறுத்திலும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், ஒரு வாா்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வாா்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com