சிவகங்கை அருகே சிற்றுந்து கவிழ்ந்து 46 போ் காயம்
By DIN | Published on : 03rd December 2019 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகங்கை அருகே திங்கள்கிழமை சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பயணிகள் காயமடைந்தனா்.
சிவகங்கையிலிருந்து மாங்குடி கிராமத்துக்கு தினசரி சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை மாங்குடியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கைக்கு வந்து கொண்டிருந்த சிற்றுந்து, கிடாபுரி கண்மாய் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 27 பெண்கள் உள்பட 46 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.