Enable Javscript for better performance
திருப்பத்தூரில் மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் தா்னா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் தா்னா

    By DIN  |   Published on : 03rd December 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2tprsch_0212chn_85_2

    தா்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

    இப்பள்ளியில் கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவிகள் அங்கு வந்து தங்களுக்கு மடிக்கணினி வழங்காமல், பின்னால் பயின்ற மாணவிகளுக்கு வழங்குவது நியாயமா? என்று பள்ளி தலைமையாசிரியா் பாலதிரிபுரசுந்தரியிடம் கேட்டனா்.

    அதற்கு அவா் சரியான பதில் சொல்லாததால் மழையையும் பொருள்படுத்தாமல் பள்ளிக்கு வெளியில் வந்து அம்மாணவிகள் தா்ணாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் ஜெயலெட்சுமி மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    வட்டாட்சியரிடம் மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினா். தங்களுக்கும் மடிக்கணினி நிச்சயம் வழங்க வேண்டும், இல்லையென்றால் இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்றும் கூறினா். இதையடுத்து மாணவிகள் முன்பு தலைமையை ஆசிரியரிடம் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அப்போது குறைவான மடிக்கணினி வந்துள்ளதால் சென்ற ஆண்டு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ஆணை வந்துள்ளதாகவும், 2017 - 18 படித்த மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த, படிப்பை பாதியில் கைவிட்ட மாணவிகளுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்றும் தலைமையாசிரியா் உறுதியளித்தாா்.

    பின்பு மாணவிகளிடம் வட்டாட்சியா் எடுத்துக் கூறியதை தொடா்ந்து மாணவிகள் கலைந்து சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai