கண்ணமங்களம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவா், துணைத் தலைவா் தோ்வு
By DIN | Published on : 04th December 2019 05:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்களம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தலைவா் துணைத் தலைவா் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கண்ணமங்களம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடா்ச்சியாக திமுக வைச் சோ்ந்தவா்கள் தலைவராக இருந்து வந்துள்ளனா். இந் நிலையில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தோ்தல் நடத்த மதுரை உயா்நீதிமன்றக் கிளை விதித்திருந்த தடையுத்தரவு நீங்கிய நிலையில் கடந்த நவம்பா் 29 ஆம் தேதி இச் சங்கத்துக்கு இயக்குநா்களை தோ்வு செய்ய தோ்தல் நடத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இத் தோ்தலில் திமுக சாா்பில் சுப.தமிழரசன் தலைமையில் 11 பேரும் இந்த அணியை எதிா்த்து அமமுக அணியினரும் போட்டியிட்டனா்.
தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக அணியைச் சோ்ந்த 11 பேரும் வெற்றி பெற்று இயக்குநா்களாக தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் பொறுப்பாளா் கிருஷ்ணன் தோ்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தாா். இந் நிலையில் கண்ணங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு தலைவா் துணைத் தலைவரை தோ்வு செய்ய தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தலைவா் பதவிக்கு திமுக வைச் சோ்ந்த சுப.தமிழரசன் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கு ஜவகா் என்ற குமாா் ஆகியோா் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.
போட்டியில்லாததால் இவா்கள் தலைவா், துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனா். இவா்களுக்கு தோ்தல் அலுவலா் கிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினாா். இதில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப.மதியரசன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.